பிரித்தானியாவில் உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழுக்கு எடுத்து வரப்படுகிறது!

பிரித்தானியாவில் கடந்த மாதம் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரணிக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து வந்த நிலையில் தீடிரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் அவரின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய இளைஞரின் சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் திடீர் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.